க.விஜயரெத்தினம்


மட்டக்களப்பு மாவட்டத்தை ஊழலற்ற,சிறந்தொரு மாவட்டமாக மாற்றியமைப்பேன் என மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.


களுவாஞ்சிகுடியில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை கடந்த வெள்ளிக்கிழமை (25) திறந்து வைத்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.இந்நிகழ்வில் வெளிநாட்டு,வெளிவிவாகார பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரா,வேட்பாளர்களானா மகேஸ்வரன் ஜனகோபன்,துவேனிகா ருக்மாங்கதன்,ஊர்மக்கள் கலந்துகொண்டார்கள்.


தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்..

எமது தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளராக சமூக அக்கறை கொண்ட, ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாத, சிறந்த தலைமைத்துவ கொண்டவர்களைத்தான் நாங்கள் தேசிய மக்கள் சக்தியில் வேட்பாளராக இறக்கியுள்ளோம்.ஆனால் எதிர்கட்சியில் வேட்பாளராக களம் இறக்கியுள்ளவர்களையும்,ஏனைய கட்சியில் வேட்பாளராக களம் இறக்கியுள்ளவர்களையும் அலசிப்பார்த்தால் கடந்த காலத்தில் ஊழல் செய்தவர்களையும்,பலகுற்றச்சாட்டுக்கள் உள்ளவர்களையும் சமூக சிந்தனையற்ற,தலைமைத்துவ பண்பற்றவர்களையும் வேட்பாளராக களம் இறக்கியுள்ளார்கள்.


இவர்களை வாக்களித்து பிரதேச சபைக்கு அனுப்பினால் மக்களுக்கு என்ன இலாபம் கிடைக்கும்?.தமிழ்மக்களாகிய நீங்கள் சமூக சிந்தனையற்ற,தலைமைத்துவ பண்பில்லாதவர்களை வாக்களித்து அனுப்பினால் மக்களின் வரிப்பணத்தை கொண்டு கிறவலைத்தூவி றோட்டுப்போட்டு பொக்கட்டில் பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்வார்கள்.இவ்வாறானவர்களுக்கு வாக்களித்து அனுப்பினால் மக்களின் வரிப்பணம் இல்லாமற்போகும்.நகைச்சுவை நடிகர் வடிவேல் "கிணற்றை காணவில்லை" எனத்தேடும் போது எருவில் மக்கள் குளத்துக்குள் விளையாட்டு மைதானத்தை இப்பவும் தேடுகின்றார்கள்.தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.மைதானத்தையும்,பணத்தையும் காணாமற் ஆக்கப்பட்டுள்ளதை மண்முனை தென் எருவில் பற்று மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.
ஆகவே இப்பிரதேச மக்கள்,மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சித்தித்து வாக்களிக்க வேண்டும்.நிச்சயமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளையும் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியை கைப்பற்றும்.தேசிய மக்கள் சக்தியோடு மட்டக்களப்பு மக்கள் இணைந்து திசைகாட்டிக்கு வாக்களியுங்கள்.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளையும் எங்கள் கட்சியினர் கைப்பற்றி மாவட்டத்தை சிறந்ததொரு,ஊழறற்ற மாவட்டமாக நாங்கள் உருவாக்குவோம் எனத் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours