மட்டக்களப்பு தேசிய கல்லூரியின் பீடாதிபதியாக கணேசரெத்தினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிவாச்சாரியார்கள் முன்னிலையில் சிவாச்சாரிய மங்கள நன்நீராட்டு விழா
கிழக்கு மாகாண கல்வி செயலாளர் குணநாதன் கல்முனைக்கு விஜயம்
வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தற்காலிமாக கடமையாற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊழியர்கள் நிரந்தரமாக்ககோரி கவயீர்ப்பு ஆட்பாட்டம்.
சாய்ந்தமருது அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்.!
பணத்திற்கோ சலுகைக்கோ சோரம் போகாது மக்களது பிரச்சினைகளுக்காக களத்தில் நின்று செயற்படும் செயல்வீரர்கள் தமிழரசுக்கட்சியில் இருப்பவர்கள் இவ்வாறானவர்களுக்கே எதிர்வரும் தேர்தலில் மக்கள் வாக்களித்து தமிழரசுக்கட்சியினை அமோக வெற்றியடையச் செய்வார்கள் என்பது எவ்வித ஐயப்பாடும் இல்லை என உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக்கட்சியில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் சின்னவத்தை வட்டாரத்தில் போட்டியிடும் கா.யோகராசா தெரிவித்தார்
ஞாயிற்றுக்கிழமை சின்னவத்தை வட்டாரத்தில் உள்ள தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவிக்கும்போது மேற்கண்டவாறுதெரிவித்தார்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழரசுக்கட்சியானது ஆரம்பிக்கப்பட்டகாலம் தொடக்கம் இன்றுவரைக்கும் மக்களுக்காக குரல்கொடுத்துக்கொண்டு இருக்கின்றவர்கள் தேர்தலுக்காக அரிசி பருப்பு மா கொடுத்து வாக்குச் சேகரிப்பவர்கள் தமிழரசுக் கட்சியினர் இல்லை உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு செயற்படும் கட்சி தமிழரசுக்கட்சி என்பதனை எமது மக்கள் நன்கு அறிந்தவர்கள்
எமது சின்னவத்தை வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் நகர்புரத்தில் வசிக்கவில்லை இங்கு பலபிரச்சினைகள் இருக்கின்றன அதிலும் யானையிடம் இருந்து எமது மக்களைப் பாதுகாக்கவேண்டியுள்ளது அதேபோன்று வெள்ள அனர்;த்தம் நவம்பர் டிசம்பர் மாதங்களில் ஏற்பட்டால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது இந்த விடயங்களை பிரதேசசபையினூடாகவும் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவிமூலமும் நிவர்த்திசெய்யவுள்ளேன் என்பதுடன் வடகிழக்கில் உள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தமிழரசுக்கட்சி கைப்பற்றி ஆட்சி அமைக்க எமது தமிழ் மக்கள் அதற்கான ஆணையினை வழங்குவார்கள் எனத் தெரிவித்தார்
Post A Comment:
0 comments so far,add yours