( வி.ரி.சகாதேவராஜா)

அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை சிவ தீட்சை வழங்கும் நிகழ்வை சங்கத்தின் உப தலைவர் சைவப் புலவர் சிவானந்த ஜோதி ஞானசூரியம் தலைமையில் சைவமணம் கமழ நடத்தியது.

 செட்டிபாளையம் சோம கலாநாயகி சமேத சோமநாத லிங்கேஸ்வரர் சிவன் ஆலயத்தில் சைவ சமய பிரச்சாரச் செயலாளர் சைவப்புலவர் வே. மகேசரெத்தினம்( ஓய்வு நிலை அதிபர்) நெறிப்படுத்தலில்  இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .

தீட்சைகளை பிரபல குருக்கள் மு.கு.சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் வழங்கினார் .

 தொடர்ந்து சான்றிதழ் நித்திய அனுஷ்டான விதி புத்தகம் என்பன வழங்கப்பட்டது.

 7 வயதுக்கு கூடிய ஆண் பெண் இருபாலரும் சுமார் 100 பேர் கலந்துகொண்டு சிவ தீட்சை பெற்றனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours