க.விஜயரெத்தினம்

விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ரூவன் கொடித்துவக்கு மட்டக்களப்பிற்கு விஜயம்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ரூவன் கொடித்துவக்கு இன்று (05) மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலை 09.00 மணியளவில் மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ரூவன் கொடித்துவக்கு மட்டக்களப்பு விமான நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் மட்டக்களப்பு நகருடன் புதூர் பகுதியை இணைக்கும் பாதை தொடர்பிலான விடையங்கள் தொடர்பாகவும் இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு விமானப்படை கட்டளை அதிகாரி சரத் பண்டார, தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் திலகநாதன், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவி வனிதா செல்லப் பெருமாள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசித்த தடன், அவற்றிற்கான தீர்வுகளை மிக விரைவாக பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார்.


மட்டக்களப்பு நகரில் இருந்து புதூர் பகுதியை இணைக்கும் வீதியை விமானப்படைக்கான காணியின் ஊடாக புதிய வீதியை புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை பார்வையிட்ட பிரதியமைச்சர், புகையிரத நிலையத்தில் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்ததுடன், இங்கு நிலவும் குறைபாடுகளை மிக விரைவில் தீர்த்து வைப்பதாக வாக்குறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours