இன்று சிறப்பாக நடைபெற்ற தேசிய ஆக்கத்திறன் விருது மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்ற உலக கை சுகாதார தினம்
கடலில் நடக்கும் திருட்டை தடுக்கவும் - மருதூர் சதுக்கத்தில் ஒன்று கூடிய மீனவர்கள் !
விபத்தில் 22 பேர் உயிரிழப்பு
மாளிகைக்காடு முஸ்லிம் விவாக பதிவாளராக ரஹுபி பிர்தௌஸ் நியமனம் !
( வி.ரி.சகாதேவராஜா)
பெரியகல்லாற்றின்
பிரபல மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் சீனித்தம்பி தங்கவடிவேலின்
சிலையை அன்னாரின் சகோதரி மற்றும் பிரதம அதிதி பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரன் மற்றும் வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர்
ஞா.சஞ்ஜய் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
சிலை
திறப்பை தொடர்ந்து அதற்கு பொருத்தமானதாக டாக்டர் சீனித்தம்பி தங்கவடிவேல்
அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மகப்பேற்று விடுதியும் புனரமைப்பு
செய்யப்பட்டு கடந்த ஏழு வருடங்களின் பின் திறந்து வைக்கப்பட்டது.
பிரதம
விருந்தினர் இவ் விடுதி பற்றி குறிப்பிடுகையில் .. தனியார்
வைத்தியசாலையிலும் பார்க்க சிறப்பாக சகல முக்கிய அம்சங்களுடன்
அமைக்கபட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும் என்று குறிப்பிட்டார்
குறிப்பாக
நிதியூட்டம் சுவிற்சலாந்தில் வதியும் சந்திரசேகரன் குடும்பத்தினரால்
குடும்ப தலைவியின் நினைவாக செய்யப்பட்டது சிறப்பம்சமாகும். இத்தகைய
கருமங்களே நின்று நிலைக்க கூடியவை. எனவே நன்கொடையாளர்கள் இதை முன் உதாரணமாக
கொள்ள வேண்டும். நிதி துஸ்பிரயோகம் இடம் பெறாமல் முழுமையாக
பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.
Post A Comment:
0 comments so far,add yours