பொறியியல் துறைக்குத் தெரிவாகி வேப்பையடி மாணவன் தபோசன் சாதனை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை 18ம் வட்டாரத் தேர்தல் பணிமனை திறப்பு
உள்ளுராட்சி சபைகளில் அடாவடித்தனமான அரசியல்,ஊழல் மோசடிகள்,,றோட்டுப் போட்டு பொக்கட்டில் பணத்தை கொண்டு போகும் பின்போக்கத்தனமான அரசியல் ஒழிக்கப்படும்.தேசிய மக்கள் சக்தியின் களுவாஞ்சிகுடி வட்டார வேட்பாளர் மகேஸ்வரன் ஜனகோபன் தெரிவித்தார்
சின்வத்தை வட்டாரத்தில் தமிழரசுக் கட்சிக்கு அமோ வரவேற்பு
மட்டக்களப்பு மாவட்டத்தை ஊழலற்ற,சிறந்தொரு மாவட்டமாக மாற்றியமைப்பேன் என மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
பட்டிப்பளையில் சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தையும், உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் கொக்கட்டிச்சோலை பொதுச் சந்தையில் இன்று (11) நடைபெற்றது.
பட்டிப்ளையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரின் ஏற்பாட்டில் உள்ளூர் சுய தொழில் உற்பத்தி முயற்ச்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்பை கொக்கட்டிச்சோலை பொதுச் சந்தையில் விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தனர்.
தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதுடன், நுகர்வோர்களிடம் இருந்து வருகின்ற கேள்விகள் மற்றும் விற்பனை வாய்ப்புகளை சலுகை விலையில் மக்கள் கொள்வனவு செய்வதற்கான களமாக இக் கண்காட்சி காணப்படுகின்றது.
இப்பிரதேச செயலக பிரிவில் உற்பத்தி செய்யப்படும் பெறுமதிசேர் பொருட்களை பெருந்திரளான மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் பட்டிப்ளை உதவி பிரதேச செயலாளர் திருமதி மேனகா புவிக்குமார், சமூர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், வங்கி அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours