பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்குப் பாராட்டு
2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் பூர்த்தி-அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்
ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்திச் செயலமர்வு.-2025
கோளாவில் கிராமத்தில் முதலாவது வைத்தியத்துறை மாணவனாக துஸ்மிதன் தெரிவு! வரலாற்று சாதனை படைத்த துஸ்மிதனுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன!
நாளை அதிகாலை இலங்கையின் மிக நீண்ட யாழ்.சந்நதி- கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம்
(எஸ்.அஷ்ரப்கான்,
ஏ.எல்.எம்.ஸினாஸ்)
தார்மீக
சமூகத்திற்கான சமூக விழிப்புணர்வு அமைப்பின் (ஸம்ஸ் சிறீலங்கா) பல
தசாப்தங்களுக்கும் மேலாக எமது சமூகத்திற்கு அளப்பரிய சேவைகளை செய்த சிரேஷ்ட
சமூக சேவையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை அமைப்புக்களை
கௌரவிக்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அமைப்பின்
தலைவர் ஏ.ஜே.ஜனூபர் தலைமையில் செயலாளர் எம்.எம்.அப்துல் ஹமீட் இன் வழி
நடாத்தலில்
19.04.2025 இடம்பெற்றது.
சமூகத்தில்
ஒழுக்கமான கௌரவமாக வாழக்கூடிய எதிர்கால சந்ததிகளை உருவாக்கி தெளிவான
புரிதலோடு எதையும் எதிர்கொண்டு சமாளிப்போம் சாதிப்போம் எனும் நோக்கத்தோடு
இளம் தலைமுறையின் அங்கத்தவர்களால் முன்கொண்டுசெல்லப்படும் ஒரு சமூக
அக்கறையுள்ள சம்ஸ் சிறீலங்கா அமைப்பு
பல்வேறுபட்ட
சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. அதில் ஒரு அங்கமாக
ஆண்டுதோறும் சமூக சேவை சார்ந்த தனி நபர்களையும் நிறுவனங்களையும் அவர்களது
சமூக சேவையினை பாராட்டி கௌரவித்து வருகின்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர்
டாக்டர் யு.எல்.அப்துல் மஜீட், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப்,
கெளரவ அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபை செயலாளர்
எஸ்.சிஹாபுடீன் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் குரூஸ் குணரத்னம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours