(  வி.ரி.சகாதேவராஜா)

"ஈழத்து பழநி"என அழைக்கப்படும் கிழக்கின்  சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலை முருகன் ஆலயத்தின்
வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதி நாளான நேற்றுமுன்தினம் (11)   வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

ஆலய பரிபாலன சபைத் தலைவர் முருக பக்தர் சுப்பிரமணியம் தியாகராஜா ( இ.அதிபர்) தலைமையில்  மகோற்சவகால குரு சிவஸ்ரீ சுபா பாஸ்கர குருக்கள் தீர்த்த கிரியைகளை வைத்தார்.
 
சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ, நமசிவாய சுவாமி மகேஸ்வரன், தலைவர் ஆதித்தன் உபதலைவர் மனோகரன் உள்ளிட்ட சித்தர்கள் குரல் உறுப்பினர்கள் மற்றும் அடியார்கள் புடை சூழ தீர்த்தோற்சவம் அங்குள்ள தீர்த்தக் கிணற்றில் விமரிசையாக நடைபெற்றது.

பங்குனி உத்தர நன்நாளின் நள்ளிரவில் சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ வேலோடுமலை 12 ராசி சக்கர லிங்கங்கள் முன்னிலையில் 300 அஸ்திர மந்திரங்களால் முருக பெருமானின் சத்ரு சம்ஹார  ஹோமத்தை  நடாத்தினார்.  நள்ளிரவில் பலமணி நேரம் மந்திர ஜெபம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours