கல்முனை பிராந்திய பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-82 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை இறையடி சேர்ந்தார்!!
மட்டக்களப்பு மாவட்டம் இரண்டு தங்கப்பதக்கங்களை சுபிகரித்தது
வெல்லாவெளியில் இலவச கண் சிகிச்சை முகாம்
வெல்லாவெளி விளாந்தோட்டத்தில் மினி சூறாவளி இரண்டு வீடுகள் சேதம்
கமல்
அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் சித்தி பெற்று சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் சபேஷ்குமார் தலைமையில் நடை பெற்றது.இந் நிகழ் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மானவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலை
வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் இம்முறை சித்தி பெற்றுள்ளனர். அந்த வகையில்
வைத்திய துறைக்கு 9 மாணவர்களும் பொறியியற் துறைக்கு 1 மாணவரும் விஞ்ஞான
மற்றும் கணித பிரிவில் ஏனைய துறைகளுக்கு 39 மாணவர்களும் வர்த்தக துறையில்
15 மாணவர்களும் கலைத் துறையில் 28 மாணவர்களும் தொழில்நுட்பத் துறையில் 07
மாணவர்களும் சித்தி பெற்று மொத்தமாக 98 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு
இம்முறை தெரிவாகியுள்ளனர்.
சாதனை
படைத்த மாணவர் பாண்டுவாத்திய இசை கொண்டு மாலையணிந்து வரவேற்றதுடன் பழைய
மாணவரும் களுவாஞ்சிகுடி கே.எம்.எஸ் நகை மாளிகையின் உரிமையாளருமான
சா.குவாசன் அவர்களினால் வைத்திய பொறியியல் துறைக்கு தெரிவாகிற
மாணவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையும் பெறுமதி
வாய்ந்த பிரயாண பையும் வழங்கி வைக்கப்பட்டது டன் ஏனைய துறையில் சித்தி
பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வகையில் ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான
காசோலையும் இதன்போது அதிபரிடம் கையளிக்கப்பட்டது..
Post A Comment:
0 comments so far,add yours