தேர்தல் பணிக்காகச் சென்ற அதிகாரி ஒருவர் உயிரிழப்பு
சித்ரா பௌர்ணமியில் வேலோடுமலையில் மாபெரும் குபேர வேள்வி! அனைவரையும் அழைக்கிறார் சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ
ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை !
காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றப்போவது யார்?
அம்பாறை மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு
(க.விஜயரெத்தினம்)
எதிர்வரும்
உள்ளுராட்சி சபைகளில் அடாவடித்தனமான அரசியல், ஊழல் மோசடிகள்,கிறவலைத்தூவி
றோட்டுப்போட்டு பொக்கட்டில் பணத்தை கொண்டுபோன பிற்போக்கத்தனமான அரசியல்
கலாச்சாரம் இனியும் இடம்பெறாது
என களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் மகேஸ்வரன் ஜனகோபன் தெரிவித்தார்.
அவர் இன்று(26)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..
தமிழ்
கட்சிகளை பொறுத்தமட்டில் பொய்யான,கையாலாகாத அபிவிருத்தி வேலைத்திட்டம்
சம்பந்தமான வாக்குறுதிகள் தமிழ்மக்களுக்கு வழங்கப்படலாம்.
அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் வல்லமையும் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியால் மட்டுமே சாத்தியமாகும்.
எமது
கிராமத்தில் பல அபிவிருத்திகள் செய்யவேண்டிய தேவை இருக்கின்றது.பிரதான
வீதியில் இருந்து மாரியம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதி உட்பட பல வீதிகள்
குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது.பல வீதிகள் கிறவல் வீதியாக
காட்சியளிக்கின்றது.பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்,
ஏழைக்குடும்பங்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும்.மாற்றுத்திறனாளில்
உள்ள குடும்பத்தின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டு அவர்களின் சமூக நலன்
மேம்பாட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும்.
கடற்கரை
சூழல்,திண்மக்கழிவகற்றல் வேலைத்திட்டம் மேலைநாடுகள் போன்று விஸ்தரிக்க
வேண்டும்.சிறுவர் பூங்கா அமைத்தல், முதியோர்களின் நலன் சார்ந்த விடயங்கள்
உட்பட பல அபிவிருத்திகளை களுவாஞ்சிகுடி மண்ணுக்கு நான் செய்து காட்ட
வேண்டும்.அதற்காக நான் திசைகாட்டி சின்னத்தில் களுவாஞ்சிகுடி வட்டாரத்தில்
போட்டியிடுகின்றேன்.
பேரன்புமிக்க களுவாஞ்சிகுடி
வாக்காளப் பெருமக்களே நமது தலையெழுத்தை பிழையாக எழுதிக்கொண்டு ஒப்பாரி
வைத்து அழுவதற்கான நேரம் இதுவல்ல.அனைவரும் ஒன்றுபட்டு கோபம்,குரோதங்களை
மறந்து நமக்கும்,நாளைய சந்ததிக்கும் நல்லது நடப்பதற்கும் எதிர்காலத்தை
ஒளிமயமாக்குவோம்.
என்னையும் உங்களின் ஒருவராக
தேர்ந்தெடுத்து திசைகாட்டி சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றிபெறச்
செய்ய வேண்டும்.நான் வெற்றி பெற்று உங்களின் தேவைக்காகவும்,கிராமத்தின்
அபிவிருத்திக்காகவும் நான் அயராது உழைப்பேன்.தேசிய மக்கள் சக்திக்கு
வாஞ்சியூர் மக்கள் வாக்களித்து தேசிய அபிவிருத்தியில் இணைந்திருங்கள்.
றோட்டுப்போட்டு பொக்கட்டில் பணத்தை எடுத்துச் செல்லும் அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.சம்பிரதாய
அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டிலே புதிய அரசியல் கலாச்சாரம்
உருவாக்கப்பட்டுள்ளது.பல பெருச்சாளி அரசியல்வாதிகள் சுயமாகவே
ஒதுக்கிவிட்டார்கள்.ஒதுக்கப்படுவார்கள்.மக்களின் வரிப்பணத்தை கொண்டு
கடந்தகாலத்தில் றோட்டுப்போட்டு றோட்டே இல்லாமல் ஆக்கியவர்களை எதிர்வரும்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொதுமக்கள் ஒதுக்கி விடனும்.
குடும்ப
ஆட்சி என்று மக்களின் பணத்தை ஏப்பம்விட்டு சுதாகரித்துக்கொண்டு சுகபோகம்
அனுபவித்த பல ஊழல்வாதிகளை கடந்த செப்ரெம்பர் மாதம் நாட்டுமக்கள் சரியான
தீர்மானம் எடுத்து நிராகரித்துள்ளார்கள்.ஒதுக்கி
விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள்.இனியும் இலஞ்சம்,ஊழல்கள் நாட்டில்
இடம்பெறாது.கடந்த 76 ஆண்டுகளாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் ஊழல்
குப்பைகளைத்தான் சேமித்து வைத்துள்ளார்கள்.இக்குப்பைகளை ஒரிரு வாரங்களிலோ
அல்லது ஆறுமாதத்திலோ அகற்ற முடியாது.அவை படிப்படியாக அகற்றப்படும்.
தோழர்
அநுரகுமார திசநாயக்கவின் ஆட்சி இன்னும் 5 வருடங்கள் நீடிக்கும்.அதுவரையும்
மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டம்,மக்களுக்கான தீர்வு தோழரினால்
நிறைவேற்றப்படும்.இனியும் உள்ளுராட்சி சபைகளில் ஊழல், அடாவடித்தன அரசியல்
கிறவலைத்தூவி றோட்டுப்போட்டு, பொக்கட்டில் பணத்தை போட்டு ,வீட்டுக்கு
கொண்டு போவது இடம்பெறாது.
ஆளும்
கட்சி உறுப்பினரால் மட்டுமே பிரதேச சபை நிதியூடாகவும் ,ஆளும் அரசாங்க
அமைச்சர்களூடாகவும் நமது களுவாஞ்சிகுடி கிராமத்தை ஊழல் அற்ற
அபிவிருத்தியால் கட்டியெழுப்பமுடியும்.களுவாஞ்சிகுடியில்
அரசாங்கத்தால் பல கோடிக்கான அபிவிருத்திகள் நடைபெற்று அடையாளங்களாக
இருக்கின்றது.எனவே களுவாஞ்சிகுடி கிராமத்தின் எழுச்சிக்காக திசைகாட்டிக்கு
வாக்களித்து நீங்கள் எமது கிராமத்துக்கு ஒளியூட்டுவீர்கள் என
நம்புகின்றேன்.
எனத்தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours