நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது .
கடந்த திங்கட்கிழமை(31) மாலை காணாமல் சென்ற குறித்த மீனவர் நண்பருடன் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் சென்றிருந்தார்.இந்நிலையில் தனது கணவரைக் காணவில்லை என மனைவி செவ்வாய்க்கிழமை (01) காலை இறக்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.குறித்த முறைப்பாட்டிற்கமைய செவ்வாய்க்கிழமை ( 01) குறித்த காணாமல் சென்ற மீனவரின் நண்பரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து இன்று (01) செவ்வாய்க்கிழமை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது காணாமல் சென்ற மீனவரின் சடலம் நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.மேலும் சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை - பாண்டிருப்பு செல்லப்பா வீதி பாண்டிருப்பு 01 ஏ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய செல்வராசா வெற்றி வேல் ( பெரிய தம்பி) என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
அத்துடன் மீட்கப்பட்ட மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours