( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்ட திருக்கோவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் அப்பர் பெருமானின் சித்திரைத்சதய   குரு பூசை தினமும் பாராட்டு விழாவும்  சிறப்பாக நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது .

 குருகுலப் பணிப்பாளர் கண. இராசரெத்தினம்( கண்ணன்)  தலைமையிலே நடைபெற்ற விழாவில் திருக்கோவில் பிரதேசத்தில் குருகுலத்தினால் நடத்தப்படும் அறநெறி பாடசாலைகள் கலந்துகொண்டு சிறப்பித்தன.

 இந்நிகழ்வில் குருகுல குருமார்களும் கலந்து ஆசி வழங்கினர். ஆறுமுக கிருபாகர குருக்கள் ,பிருதுவிந்த சர்மா ,ஆகியேரும் திருக்கோவில் பிரதேச செயலக  இந்து கலாசாரஅபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி  நிஷாந்தி தேவராஜன்  கலந்து சிறப்பித்தார்.

 இந்நிகழ்வில்  விநாயகபுரம் முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலர் சபையினரும் அறநெறி பாடசாலை மணவர்கள் கலந்துகொண்டு பேச்சு கவிதை ,வினா விடை, என்பவற்றை நிகழ்த்தினார்கள். அவர்களுக்கான பரிசுகள் குருகுலத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

 குரு பூஜையின்போது திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் 47 ஆண்டுகளுக்கு மேலாக பொதுச்செயலாளராக கடமையாற்றிய கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் உப  அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்ற பா. சந்திரேஸ்வரன்  குருகுல நிர்வாகத்தினராலும் முத்துமாரியம்மன் பாடசாலை மற்றும் முத்து மாரியம்மன் ஆலய அறங்காவலர்களாலும் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டார்.

 இந்நிகழ்வில் போட்டிகளிலே பங்கு பற்றிய மாணவர்களுக்கான  பரிசுகளும் வழங்கப்பட்டன.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours