( வி.ரி. சகாதேவராஜா)

 பிராந்தியத்தில் இனஐக்கியத்தையும் மதநல்லிணக்கத்தையும் பிரதேச ஒற்றுமையையும் வலியுறுத்தி கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரமாண்டமான முறையில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

 கல்முனை  ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (29) இவ் இன ஐக்கிய இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.

அங்கு பணிப்பாளர் மருத்துவர் பேசுகையில் ..
அனைத்து மதங்களுக்கும் விரதம் நோன்பு என்பன பொதுவாக இருக்கின்றது. குறிப்பாக ரமழான் காலத்திலே பசித்தவர்களுக்கு தேவையானவர்களுக்கு எமது உதவிக்கரம் நீள வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கி இருக்கின்றது. 
எனது சக இஸ்லாம் சகோதரர்கள் இப்தார் நிகழ்வை நடத்த வேண்டும் என்று கேட்ட பொழுது நீங்கள் ஏன் இதை முன்கூட்டியே கேட்கவில்லை மிகவும் பிரமாண்டமாக அதனை செய்யுங்கள் என்று ஆலோசனை கூறினேன். அதற்கமைய இந்த இந்த கூட்டம் இடம்பெறுகின்றது.
எமது வைத்தியசாலை ஊழியர்கள் மனிதநேயமிக்க ஊழியர்களாக  இருக்க வேண்டும். நோயாளி யாராக இருந்தாலும் மனித நேயஅடிப்படையில் நாங்கள் சேவையாற்ற வேண்டும் .
இங்கு மதநல்லிணக்கம் ஒற்றுமை என்பதை இன்னும் வலுவாக பின்பற்ற வேண்டும். அதற்காக இவ் வைத்தியசாலை தொடர்ந்து பயணிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். அனைவருக்கும் புனித ரமழான் வாழ்த்துக்கள் என்றார்.

 வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியகலாநிதி சாமித்தம்பி இராஜேந்திரனின் நெறிப்படுத்தலின் கீழும், வைத்திய சாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தாஹிரா சபியுடீன்னின் ஆலோசனையின் கீழும் மிகச் சிறப்பான முறையில் இடம் பெற்றது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours