( வி.ரி.சகாதேவராஜா) 
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாட்டின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் (Marc-André Franche)ஆகியோருக்கு இடையே கடந்த (04)ம் திகதி திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதில், கிழக்கு மாகாணத்தில் பிரச்சினை தீர்க்கும் செயல்முறை மிகவும் திருப்திகரமான நிலையில் இருப்பதாகவும், தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் திரு. மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் கூறினார்.

மேலும், இலங்கையின் மேன்மைதங்கிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உட்பட அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நிர்வாகத்தால் தான் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார்.

இதில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours