காரைதீவில் ஏட்டிக்குப் போட்டியாக இரு கட்சிகள் வீடு வீடாக பிரசாரம்
கல்முனையில் புனித வெள்ளி சிலுவைப்பாதை
பிரதேச சபை தேர்தல் தொடர்பான இளைஞர்களுக்கான விசேட கூட்டம்
மாவடிப்பள்ளி பெரிய பள்ளிக்கு முன்னாள் எம்.பி ஹரீஸ் நிதி ஒதுக்கீடு : நிர்மாணப்பணிகள் தொடர்பில் ஆராய களவிஜயம் செய்தார் !
வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக பைஷல் கடமையேற்பு.!
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் (11) நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந் நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சாய்ந்தமருதில் உள்ள 17 பிரிவுகளின் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்கி வைத்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் மற்றும் சமூர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ். ஹிதாயா உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் சங்கத் தலைவர்கள் உட்பட சங்க உறுப்பினர்கள் 17 பேருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.
சமூர்த்தி வங்கிக்குப் புதிதாக தெரிவு செய்யப்பட்ட கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் இவ்வாண்டின் (2025) முதலாவதாக
அம்பாறை மாவட்டத்திலேயே அதிலும் சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் உறுப்பினர்களுக்கே வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிட்டத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours