நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 1,தரம் 4 மற்றும் தரம் 7 வரையான மாணவர்களுக்கு உடல் நிறை குறியீட்டெண் (BMI), பார்வை மற்றும் பல் என்பன பரிசோதனை செய்யப்பட்டது.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீனின் பணிப்புக்கு இணங்க சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.  மதன் அவர்களின் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை பற் சிகிச்சையாளர் , மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.

அதே போன்று கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 1 தொடக்கம் 5  வரையான மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் இடம்பெற்றது. இதன்போது பாடசாலையில் மாணவர்களுக்கு  வழங்கப்படும்  உணவு பரிசோதிக்கப்பட்டு அது  தரமற்றதாக காணப்பட்டதால் அவ் உணவை தயாரித்த  நபருக்கு தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டலும் சுகாதார வைத்திய  அதிகாரி அவர்களால் வழங்கப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.  மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours