இ.சுதாகரன்



தேசிய மக்கள் சக்தியினை வடகிழக்கில் முதன்மையடையச் செய்ய வேண்டும்தேசிய மக்கள் சக்தியின் களுதாவளை  பிரதேச சபை தேர்தல் வேட்பாளர் சண்முகநாதன்

கணேசநாதன்

தேசிய மக்கள் சக்தி வடக்கு,கிழக்கு மாகாணங்களில் அதிகளவான மாநகர,நகர,பிரதேச சபைகளை கைப்பேற்றி வரலாற்றுச் சாதனையினை ஏற்படுத்துவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை அதற்கான முழுமையான ஆதரவினை மக்கள் வழங்க வேண்டும்.அப்போதுதான் ஊழல் அற்ற நேர்மையான அரசியல் கலாச்சாரத்தினை கட்டியெழுப்ப முடியும்.இவ்வாறுதேசிய மக்கள் சக்தியின்  மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச  சபைக்கான பெரியகல்லாறு பத்தாம் வட்டார உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்  சண்முகநாதன் கணேசநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் தற்போது என்றும் இல்லாத வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸ நாயக்க அவர்களின் தலைமையில் ஊழல் அற்ற ஆட்சி நடைபெற்றுவருகின்றது.தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்து குறுகிய காலத்தினுள் நாட்டில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.இந்த அரசாங்கத்தில் தனிநபர் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றது.அதற்கு ஏற்ற வகையில் அரசாங்கத்தின் பலத்தினை அதிகரிக்கும் செயற்பாடுகள் கிராமங்களினூடாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.அதற்கான ஆடுகளம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பெரிய கல்லாறு வட்டார ரீதியில் முதன்மை நிலைபெற்று களுதாவளை பிரதேச சபையின் மக்கள் பிரதி நிதியாகத் தெரிவு செய்யப்பட்டு எதிர்க் கட்சியில் அமர்ந்து அபிவிருத்திச் செயற்பாடுகள எதிர்க்காது மக்களின் தேவைகளுக்கு வாய்ப்பளித்தது மட்டுமல்லாது பிரதேச சபை உறுப்பினருக்கான மாத வருமானத்தை ஏழை மாணவர்களின் கல்விக்காக செலவு செய்தவன் என்ற வகையில் பெருமை அடைகின்றேன்.இம்முறையும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பேன் அதற்கான சந்தர்ப்பத்தினை பெரியகல்லாறு மக்கள் வழங்க வேண்டும்.அப்போதுதான் எமது பிரதேசம் தன்னிறைவு பெறும் எனத்தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours