(வி.ரி. சகாதேவராஜா)


விசுவாசுவ சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு திருக்கோவில் சமுர்த்தி  பிரிவினால் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை இணைத்துக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற  சமுர்த்தி அபிமாணி கண்காட்சியும் விற்பனை சந்தையும்  பிரதேச செயலக வளாகத்தில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எம்.கண்ணதாசன்  தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந் நிகழ்வை பிரதேச செயலாளர்  தங்கையா கஜேந்திரன்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்தது வைத்தார் .

 இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.நிருபா கணக்காளர் ஏஎல்எம்.றிபாஸ் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா உஷாந்த் நிர்வாக உத்தியோகத்தர் டி.மங்களா கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர் என்.கந்தசாமி சமுர்த்தி பிரிவில் தலைமைபீட முகாமையாளர் எம்.அரசரெத்தினம் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஆர்.புண்ணியசீலன் தம்பிலுவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.சதீஸ் , விநாயகபுரம் சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.சசிகுமார் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,வலய வங்கி உதவி முகாமையாளர்கள்,வங்கி வலய கள உத்தியோகத்தர்கள்,திட்ட உதவியாளர்,சமூர்த்தி தலைமை காரியாலய ச.அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச மட்ட ,வங்கி க.பா.சபைத் தலைவர்கள்,வர்த்தக.ச.தலைவர் உறுப்பினர்கள்,சமூர்த்தி உற்பத்தியாளர்கள்,ச.வங்கி வாடிக்கையாளர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours