( வி.ரி. சகாதேவராஜா)

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு  
சார்பில் காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்திப்பும் காரைதீவு பொது நூலக கேட்போர் மண்டபத்தில் நேற்று (23) புதன்கிழமை  மாலை  நடைபெற்றது.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு  அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் இவ் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

 ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாகலிங்கம் குருபரன் பிரதான பேச்சாளராக கலந்து சிறப்பித்தார்.
கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சி.புண்ணியநாதன்( கல்முனை) கலந்து சிறப்பித்தார்.


காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடும் 
பிரதான வேட்பாளர் ரவிச்சந்திரன் ( சங்கரி) உள்ளிட்ட வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

இறுதியில் ஊடகச் சந்திப்பு இடம்பெற்றது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours