செஞ்சிலுவைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வு கலந்துரையாடல்!!
அம்பாறை மாவட்ட 19 சபைகளுக்கான தேர்தலில் 458 வாக்களிப்பு நிலையங்கள்; இதுவரை 385 முறைப்பாடுகள்!
மு.கா செயலாளர் நிசாம் காரியப்பருடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் சந்திப்பு.! பயங்கரவாத தடுப்பு சட்டம், மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்ற குழுத் தலைமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து எடுத்துரைப்பு.!
துறைநீலாவணையில் தமிழரசுக்கட்சியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம்
பிரபல ஆங்கில ஆசான் "சண்" காலமானார்
\(எம்.என்.எம்.அப்ராஸ்)
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாஹீம் உல் அசீஸ் கல்முனைக்கு இன்று(19)விஜயம் செய்தார்.
முன்னாள் கல்முனை மாநகர முன்னாள் பிரதி
முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள்,இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும்,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் (19) கல்முனையில் இடம்பெற்றது.
ரஹ்மத் மன்சூர் அவர்கள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரிடம் வேண்டிக்கொண்டதற்கிணங்க, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் உதவி திட்டங்களை பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாஹீம் உல் அசீஸ் கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டு பயனாளர்களுக்கு வழங்கி வைத்தார்.
மேலும் அதிதிகளான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிக இலங்கைக்கான ஆலோசகர் நுஃமான் ரஷீட் ஹயானி, சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ. எம்.ஜெளபர்,கல்முனை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜெய்ஸான்,மற்றும் பவுண்டேசன் உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours