பொறியியல் துறைக்குத் தெரிவாகி வேப்பையடி மாணவன் தபோசன் சாதனை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை 18ம் வட்டாரத் தேர்தல் பணிமனை திறப்பு
உள்ளுராட்சி சபைகளில் அடாவடித்தனமான அரசியல்,ஊழல் மோசடிகள்,,றோட்டுப் போட்டு பொக்கட்டில் பணத்தை கொண்டு போகும் பின்போக்கத்தனமான அரசியல் ஒழிக்கப்படும்.தேசிய மக்கள் சக்தியின் களுவாஞ்சிகுடி வட்டார வேட்பாளர் மகேஸ்வரன் ஜனகோபன் தெரிவித்தார்
சின்வத்தை வட்டாரத்தில் தமிழரசுக் கட்சிக்கு அமோ வரவேற்பு
மட்டக்களப்பு மாவட்டத்தை ஊழலற்ற,சிறந்தொரு மாவட்டமாக மாற்றியமைப்பேன் என மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்
சா.நடனசபேசன்
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பட்/மண்டூர் - 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயதின் கடந்த 2024 இல் சாதனை படைத்த சாதனையாளர்களை பாராட்டும் பாராட்டு விழாவும். சஞ்சிகை வெளியீடும்' கடந்த 2025.04.10 ஆந் திகதி வியாழக்கிழமை வித்தியாலய அதிபர் துரை.சபேசன் அவர்களின் தலைமையில் வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். அத்தோடு இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களும் சிறப்பு அதிதிகளாக போரதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்களும் கௌரவ அதிதிகளாக பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், முன்னாள் செயலாளர்கள், உறுப்பினர்கள், ஆலயங்கள், சங்கங்கள், கழகங்கள், அமைப்புக்களின் தலைவர்கள், கிராம சேவகர், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வின் போது கடந்த 2024 இல் பாடசாலையில் சாதனை படைத்த சாதனையாளர்களான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் பாராட்டப்பட்டதோடு பாடசாலையின் அதிபர்,பிரதி அதிபர் அவர்களும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours