( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை நகர் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான  வருடாந்த மகோற்சவத்
திருவிழாவின் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்ற  கல்முனை மாநகர முப்பெரும் இரதோற்சவம் இன்று (11 ) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பெண்கள் ஆண்கள் முண்டியடித்து ஆர்வத்துடன் பக்தி பூர்வமாக தேர் வடம் பிடித்தனர்.

கலை கலாசார பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் பெருந்திரளான பக்தர்கள் முப்பெரும் ரத பவனியில் கலந்து கொண்டனர்.

இவ் ஆலய மகோற்சவத்திருவிழா கடந்த (01)  செவ்வாய்க்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்கள் பகல் இரவுத்திருவிழாக்கள் நடைபெற்று வந்தது .


நாளை 12-ம் தேதி சனிக்கிழமை காலை தீர்த்தோற்சவம் இடம்பெறும் என்று ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் வேலாயுதபிள்ளை செவ்வேட்குமரன் ( பிரபல தமிழ் ஆசிரியர் ) தெரிவித்தார் .

மகோற்சவத்திருவிழா கிரியைகளை மகோற்சவபிரதம குருவான யாழ்ப்பாணம் வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ சி. குககணேசக் குருக்கள்,  ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஸ்ரீராமச்சந்திர தவசீலக் குருக்கள் முன்னிலையில் நடாத்தவந்தார்.

தினமும் பகல் திருவிழா இரவு திருவிழா இடம் பெற்று அன்னதானமும் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours