இன்று திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வினியோகம்!
பிராந்திய வாய் சுகாதார பிரிவின் முதல் காலாண்டு மீளாய்வுக் கூட்டம்
சவளக்கடை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு
தமிழின அழிப்பிற்கான நீதி இன்னும் இலங்கை அரசினால் நிலைநாட்டப்படவில்லை.மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் தலைவி அ.அமலநாயகி தெரிவிப்பு
தாதியர் மற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் உயர்நிலைக்கு வரக் காரணம் உங்கள் சேவையே! உலக தாதியர் தினவிழாவில் பணிப்பாளர் மருத்துவர் சுகுணன் !
பாறுக் ஷிஹான்
முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கல்முனை விஜயம்.!
கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள், இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் சனிக்கிழமை (19) கல்முனை மயோன் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த இந் நிகழ்வானது ரஹ்மத் மன்சூர் அவர்கள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரிடம் வேண்டிக்கொண்டதற்கிணங்க, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு பாஹிமுல் அஸீஸ் அவர்கள் கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டு அவரது கரத்தினால் பொருட்களை பயனாளர்களுக்கு வழங்கி இந்நிகழ்வை சிறப்பித்தார்.
மேலும் அதிதிகளான பாகிஸ்தானிய இலங்கைக்கான ஆலோசகர் நுஃமான் ரஷீட் ஹயானி, கல்முனை சமூக சேவை உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜெய்ஸான், கல்முனை சிவில் சமூக சேவை பொலிஸ் பொறுப்பதிகாரி எம். வாஹித், மற்றும் நூதுவரின் பாரியாரும் மற்றும் ஊடகவியலாளர்கள், பவுண்டேசன் உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours