பாறுக் ஷிஹான்

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சில பெறுமதியான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனைக்குடி 12 பகுதியில்  பழைய தபால் நிலைய வீதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த திங்கட்கிழமை (7) மாலை தீ விபத்து ஏற்பட்டது.

அத்துடன்  இவ்வாறு திடீரென ஏற்பட்ட தீ காரணமாக வீட்டில் இருந்தவர்கள் அலறிஅடித்து அபாய உதவி கோரினர்.உடனடியாக வீட்டின் அருகில் நின்ற இளைஞர்கள் பெரியோர்கள்   எரிந்த தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இதே வேளை மாநகர சபையின் தீ அணைப்பு பிரிவினருக்கு அழைப்பினை ஏற்படுத்திய போதிலும் உரிய இடத்திற்கு வருகை தரவில்லை என மக்கள் விசனம் தெரிவித்தனர்.மேலும் அங்கு வருகை தந்த இலங்கை மின்சார சபையினர் மின் ஒழுக்கினால் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்ட பகுதயை சீர் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours