மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் பாடுபாடு மீன் சந்தை திறந்துவைப்பு!!
சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை இலகுபடுத்த பள்ளிவாசல் முயற்சியால் தீர்வு.!
விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா
பட்டிப்பளையில் புதுவருடத்தினை முன்னிட்ட உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி
தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு தேர்தல் அலுவலகம் திறப்பு
எஸ்.சபேசன்
தமிழ் மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற கட்சி தமிழரசுக் கட்சி என்பதனை யாரும் மறந்துவிடமுடியாது இக்கட்சியினை எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் அமோக வெற்றியடையச்செய்யவேண்டிய பொறுப்பு தமிழ் மக்களின் கைகளிலே உள்ளது என மண்முனை தென்எருவில்பற்று பிரதேசசபையின் குருமண்வெளி வட்டார வேட்பாளர் அ.பத்மதேவு தெரிவித்தார்
செவ்வாய்க்கிழமை 8 ஆம் திகதி மாலை குருமண்வெளியில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து அவர்கள் முன் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர்மேலும் பேசுகையில் தமிழரசுக்கட்சியானது சலுகைக்காகவோ பணத்துக்காகவோ சோரம்போனவர்கள் அல்ல தமிழ்மக்கள் எதற்காக போராடினார்களோ அந்த உரிமையினைப் பெற்றுக்கொள்வதற்காகவே இன்று வரை பயணித்துக்கொண்டிருக்கின்றது என்பதனை யாராலும் மறந்துவிடமுடியாது.
தேர்தல் வந்தால் சிலர் ஆலயத்திருவிழாவுக்கு வருவதுபோல் ஆடித்திரிகின்றனர் இவர்களால் எம் மக்களுக்கு எதுவும் செய்யமுடியாது தேர்தல் முடிந்தால் அவர்களது ஆட்டம்முடிந்துவிடும் மக்களோடு மக்களாக களத்தில் நின்று செயற்படும் செயல் வீரர்கள் தமிழரசுக்கட்சியினர் என்பதனை எமது மக்கள் நன்கு அறிந்தவர்கள் திருவிழாவுக்கு வருகின்ற அனைவரையும் வெறுங்கையுடன் அனுப்பிவைத்துவிட்டு தமிழரசுக்கட்சியை வெற்றிவாகை சூட எமது மக்கள் தயாராகி விட்டார்கள் எனத் தெரிவித்தார்
Post A Comment:
0 comments so far,add yours