மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையற்ற மாதிரி கிராமத்தை உருவாக்கும் நிகழ்சி திட்டம்.
ஒன்பது நாட்களில் வற்றாப்பளையில் யாழ். கதிர்காம பாதயாத்திரைக் குழுவினர்!
அருகம்பை கடற்கரை பகுதியை அழகுபடுத்திய இராணுவம்
ஆதம்பாவா எம்.பி. க்கு சபாநாயகரினால் புதிய பதவி வழங்கிக் கௌரவிப்பு
கல்முனையில் 03 நாட்கள் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு.!
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமுர்த்தி வங்கிகளில் சித்திரை புத்தாண்டையொட்டி சேமிப்பை ஊக்கப்படுத்தும் வேலைத்திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய பிரதேச செயலாளர் திருமதி
நிஹாரா மெளஜுத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இவ் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கியில் சேமிப்பை ஊக்கப்படுத்த புதிய கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு சேமிப்பு பாஸ் புத்தகங்கள் (16) வழங்கி வைக்கப்பட்டன
புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர் எஸ். எச் .முசம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஆர்.வாமதேவன், உதவி முகாமையாளர் திருமதி ரசீதா முபாறக், வலய உதவியாளர் எம்.எச்.எம்.அன்வர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சேமிப்பு புத்தகங்களை வழங்கி வைத்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours