சின்வத்தை வட்டாரத்தில் தமிழரசுக் கட்சிக்கு அமோ வரவேற்பு
மட்டக்களப்பு மாவட்டத்தை ஊழலற்ற,சிறந்தொரு மாவட்டமாக மாற்றியமைப்பேன் என மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்
பற்றிமாவின் 125 வது ஆண்டு நிறைவு நிகழ்வில் புதியதொரு உதவும் திட்டம்
களுவாஞ்சிகுடியில் தேசிய மக்கள்சக்தி கட்சியின் வட்டார அலுவலகம் திறக்கப்பட்டது
பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு இலங்கை சர்வமத தலைவர்கள் இரங்கல் பதிவு
நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர்
கல்முனை பிராந்திய மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த நீச்சல் தடாக குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாக நிர்மாணப்பணிகள் நிறைவுக்கு வந்துள்ளது. அதன் பூர்வாங்க நிர்மாண வேலைகளை பார்வையிடும் முகமாக இன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
கொரோனா, பொருளாதார நெருக்கடிகள் என பல சவால்களை கடந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பல்வேறு கட்டங்களாக ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 110 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் தடாகத்தை விளையாட்டுத்துறை அமைச்சிடமிருந்து கல்முனை மாநகர சபை அடுத்த வாரமளவில் கையேற்று மக்கள் பாவனைக்கு கையளிக்கும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பிலும் மேலும் இந்த நீச்சல் தடாக பராமரிப்பு, மேலதிக அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் இதன்போது கலந்துரையாடினார்.
மேலும் இவ் விஜயத்தின் போது மாநகர சபை உத்தியோகத்தர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பாடல், ஊடக விவகார செயலாளர் யூ.எல்.நூருல் ஹுதா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நீச்சல் தடாகத்தின் மூலம் விளையாட்டு வீரர்களும், மாணவர்களும் நிறைவான பலனை அடைவதுடன் எதிர்காலத்தில் நீச்சல் போட்டிகள் மற்றும் பயிற்சிகளை பெற வசதியாக இருக்கும் என்றும் இந்த நீச்சல் தடாக நிர்மாண பணியானது கல்முனை மாநகர மக்களுக்கு மட்டுமல்ல ஏனைய பிரதேச மக்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours