துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு.
தேர்தல் காலத்தில் பொது மக்களின் அடிப்படை உரிமை மீறினால் முறையிடலாம்! மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரிவிப்பு.
பிராந்திய சுகாதார பணிமனையினால் ஊடகவியலாளர்களுக்கு கௌரவம்!!
காரைதீவில் களைகட்டிய பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டு விழா
பொத்துவிலில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம் பிரசாரத்தில் ஆதம்பாவா எம்.பி.யும் பங்கேற்பு
வி.ரி.சகாதேவராஜா)
தமிழர்கள் சித்திரை வருடப்பிறப்பு அன்று மருத்துநீர் வைத்து நீராடுவது காலம்காலமாக கடைப்பிடிக்கும் முறையாகும்.
மருத்து
நீர் என்பது தாழம்பூ, தாமரைப் பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுக்கிரந்தி,
சீதேவியார், செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம்,
கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு இவைகளை சுத்தமாக நீரில் கொதிக்க
வைத்து காய்ச்சி எடுப்பதாகும்.
எனினும்
நடைமுறையில் சில பிரதேசங்களில் இவைகளைப் பெற்றுக்கொள்வது என்பது
சாத்தியமில்லை என்பதால், இந்துக்கள், தமது வீடுகளுக்கு அருகில்
கிடைக்கக்கூடிய அறுகு, துளசி, வேப்பிலை ஆகியவற்றை மஞ்சள், பால் கலந்த சுத்த
நீரில் மிளகு, சுக்கு இட்டு, நன்கு கொதிக்க வைத்து காய்ச்சி சிரசிலும்,
பாதத்திலும் வைத்து நீராடுவது உசிதமாகும்.
இவ் வருடம் விசுவாவசு புத்தாண்டு பிறக்கும் விசு புண்ணிய காலத்தில் மருத்து நீர் வைத்து ஸ்ஞானம் செய்யலாம்.
தலையில் ஆல் இலையும் காலில் இலவம் இலையும் வைத்து சித்திரை புத்தாண்டு புண்ணியகாலத்தில் நீராடினால் நற்பலன்கள் கிடைக்கும்.
மருத்து நீரை மூலிகை மருந்துக்களின் சங்கமம் என்றே கூற வேண்டும்.
Post A Comment:
0 comments so far,add yours