தேர்தல் பணிக்காகச் சென்ற அதிகாரி ஒருவர் உயிரிழப்பு
சித்ரா பௌர்ணமியில் வேலோடுமலையில் மாபெரும் குபேர வேள்வி! அனைவரையும் அழைக்கிறார் சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ
ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை !
காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றப்போவது யார்?
அம்பாறை மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு
மட்டக்களப்பு
மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம் பகுதியில்
யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம்
புத்தாண்டன்று பதிவாகியுள்ளது.
நேற்று அதிகாலை 1 மணிக்கு வீட்டு முற்றத்தில், காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி அவர் உயிரிழந்தார்.
3 பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய சசிகரன் என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
புத்தாண்டினை
வரவேற்கும் வகையில் வீட்டு முன்பகுதியில் நண்பர்களுடன்
விளையாடிக்கொண்டிருந்தவர் சத்தம் கேட்டு வீட்டு வாசலுக்கு வந்தபோது
யானையின் தாக்குதலுக்குள்ளானதாக அப்பகுதி தகவல் தெரிவிக்கின்றன.
யானையின்
தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்தவரை உறவினர்களின் உதவியுடன் களுவாஞ்சிகுடி
வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற வேளை வைத்தியசாலையில் அதிகாலை 4.30 மணிக்கு
சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் மேலதிக நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours