முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து சவூதி அரேபிய தூதுவராலய மேற்பார்வையில் கொழும்பில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கு நிகழ்வில் இரண்டாயிரத்து மேற்பட்டோர் பங்கேற்பு
மட்டக்களப்பில் ரயில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரது பெறுமதியான பொருட்கள் மட்டக்களப்பில் ஆட்டோக்காரரால் அபகரிப்பு.
உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு உலகில் முதல் கருங்கல் சிலை! மட்.கல்லடிப்பாலத்தில் நாளை திறப்பு விழா!
சுவாமி விபுலானந்தர் அகிலத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம புகழாரம்
இறக்கமாம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
இலங்கை நிர்வாக சேவையின் மூத்த SLAS அதிகாரியான ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள்.கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்து வரும் நிலையில் 01.01.2025ஆம் திகதி.முதல் அமுலுக்கு வரும் வகையில் நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழுவினால் இத்தரத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட அதிகாரிகளுள் ஒரேயொரு முஸ்லிம் அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொத்துவில், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர், அக்கரைப்பற்று மாநகராட்சி ஆணையாளர், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளரும், பதிவாளரும், கல்முனை மாநகராட்சி ஆணையாளர், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) ஆகிய பதவிகளில் அவர் வினைத்திறன் மிக்க அதிகாரியாக சிறப்பாக கடமையாற்றியுள்ளார்.
ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் ஒரு சிறந்த நிர்வாகி, இலங்கை நிர்வாக சேவையில் 22 வருடங்கள் கடந்து பயனிக்கும் இவர் அரச கடமையினை சட்ட விதிமுறைகளை பேணி தான் எடுத்த உறுதி மற்றும் சத்திய உரை என்பவற்றுக்கு ஏற்ப நேர்மையாக செய்துவரும் ஒருவராவார்.
அமைச்சொன்றின் செயலாளராக நியமனம் பெற்று சேவையாற்ற வாழ்த்துகள்.
-அஸ்லம் எஸ்.மெளலானா
Post A Comment:
0 comments so far,add yours